என்சோக கதையை கேளுங்க ! (1)

Monday 16 May 2011




 நாங்கள் கடந்த 20 வருடத்திற்க்கு  மேலாக மும்பையில் வசித்து வருகிறோம், எனது குடும்பம் சிறிய குடும்பம் அப்பா, அம்மா, மனைவி மற்றும் 1-மகள், 1-மகன்.

அப்பா 2007ல் மும்பையில் இறந்துவிட, அம்மாவுடனே வசித்துவந்தோம். இந்த ஆண்டு எனதுமகள் +2 தேர்வு எழுதியுள்ளார், மகன் +1 ல் தேர்ச்சியாகி +2 சென்றுள்ளார். இந்த ஆண்டு மேற்படிப்பிற்க்காக எனது மகள் சில நுழைவு தேர்வு எழுத வேண்டியிருந்ததால் தமிழ்நாடு(சொந்த ஊருக்கு) செல்ல நினைக்கவில்லை. இருந்தும் திடிரென முடிவெடுத்து நானும் எனது மகனும் மட்டும் 
ஒருவார பயணமாக சொந்த ஊருக்கு சென்றுவருவது என முடிவுசெய்து பயண ஏற்பாடு செய்யும் வேலையில்,எனது நண்பர் ஊரிலிருந்து தொலைபேசியின் மூலம் நமது ஊரில் இந்த வருடம் "நாங்கூர் அய்யனாருக்கு" பொங்கள் வைத்து அன்னதானம் போடுகிறோம் தாங்கள் குடும்பத்துடன் வந்து கோவில் விஷேஷத்தில் கலந்துகொள்ளுமாறு கூற எனது அம்மாவும் ஆமாம்தம்பி இதுபோல கிராமத்துகோவில் விஷேஷத்தை நமது குழந்தைகள் பார்த்தது இல்லை நாம் அனைவரும் 1 வார பயணமாக ஊர் சென்றுவரலாம் என கூற  முதலில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று விட்டு பிறகு எங்கள் சொந்த ஊருக்கு செல்வதென பயணத்திற்க்கான ஏற்பாட்டைச்செய்தேன்.  

ஏப்ரல்16-ல் மும்பையிலிருந்து மாலை 3.45 க்கு கன்னியாகுமாரி செல்லும் இரயிலில் பயணித்து மறுநாள் மாலை 5.30க்கு காட்பாடி ரயில்நிலையம் வந்தடைந்தோம்  ,முனேற்பாடின்படி
ஏற்பாடு செய்திருந்த TATA INDIGO கார் வந்து எங்ளை அழைத்துசெல்ல காத்திருந்தது, நாங்களும் அந்த காரில் திருவண்ணாமலையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தோம்
அன்று பவுர்ணமி என்பதால் ரோட்டில் வாகன நெரிசல் அதிகமாகவே கானப்பட்டது அதுவும் அன்று
சித்ராபவுர்ணமி இருந்தும் கார் ஓட்டுனர் காரை நிதானமாக ஓட்டிச்சென்றார்.

வேலூரை தாண்டி போலுருக்குமுன்பாகவே யாரும் எதிர்பாராவிதமாக.......
உண்மைவிரும்பி.
மும்பை



தொடர்வேன்..............................................................................................

Read more...

என்சோக கதையை கேளுங்க !

Tuesday 10 May 2011

பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம் !

நான் கடந்த4- வாரமாக எந்தவித பதிவையும் படிக்கவும் இல்லை,எழுதவும் இல்லை, காரணம்   கோடைவிடுமுறை என்பதால் குழந்தைகளின் வற்புறுத்தலால்
குடும்பத்துடன் மும்பையிலிருந்து தாயகம்(சென்னை/திருவண்ணாமலை/ சின்னசேலம்/ ஆத்தூர்/சேலம்)சென்றிருந்தேன்.

கூதுகலமாகஇருக்கபோன இடத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்
வலிகளை தங்கலுடன் பகிர்ந்துகொள்வதனால் ரணத்திற்க்கு மருந்து கிடைக்கும் என்ற என்னத்தில்
   வலிகளை அடுத்தபதிவில் பகிற்கிறேன் !


இவண்.தங்களின் அன்பு நண்பன்
உண்மைவிரும்பி
.

மும்பை.

Read more...

சித்திரை வாழ்த்து !

Wednesday 13 April 2011



சித்திரையே வருக
செழுமையான வாழ்வை தருக!

சாதிமத மோதலில்லா
சமத்துவத்தை தருக !

நோய்நொடி இல்லாத
வாழ்க்கையை தருக!

ஏழ்மையில்லாத
இந்தியாவை தருக!

தரணியெல்லாம்- நல்
மழைப்பொழிய வைத்து தருக!

நித்தம் நித்தம் யுத்தமில்லா
நித்திரையை தருக !

சித்திரை தமிழ்தாயே வருக -மக்களுக்கு
செழுமையான வாழ்வை தருக!



உண்மைவிரும்பி.
மும்பை.

Read more...

மனம் ஒரு குரங்கு !

Saturday 9 April 2011



மனம் ஒரு குரங்கு - மரம்விட்டு மரம் தாவும்
மந்திகள் போல !

நிலையான வாழ்வில் நிலைக்க நினைப்பதில்லை
நேற்று அதை செய்தேன் , இன்று இதை செய்தேன்,
நாளை அதைச்செய்வேன் - என்ற முடிவில்லா சிந்தனை !

சுற்று வட்டத்திலோ ,சொந்தபந்தத்திலோ
இழப்போ, இறப்போ வந்தால்மட்டும் - மனம்
விழித்துக்கொள்கிறது !

தனக்குத்தானே ஒரு சிறிய சமாதானம்
நேற்று அவன் எதைக்கொண்டுவந்தான், இன்று
எதைக்கொண்டுச்செல்கிறான் - ஒன்றுமில்லை என்று !

நாளை இதைச்செய்யவேண்டும் , அதைவாங்கவேண்டும்
மனதில் ஒரு சலனம் - ஆனால்

நான் என்னசெய்ய பெற்றபிள்ளைகள்,
பேறபிள்ளைகள் வேற அதற்க்காகதான் அல்லல் படுகிறேன்
மற்றவருக்கு ஒரு நொண்டிசாக்கு!

ஆம் மனம் ஒரு குரங்கல்லவா ?




உண்மைவிரும்பி.
மும்பை.

Read more...

த‌மி‌ழ் நடிகை சுஜாதா காலமானா‌ர் !

Wednesday 6 April 2011


உட‌ல்நல‌க் குறைவா‌ல் பிரபல த‌மி‌ழ் நடிகை சுஜாதா செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று காலமானா‌ர்.

அவ‌‌ள் ஒரு தொட‌ர் கதை எ‌ன்ற பட‌த்‌தி‌ல் அ‌றிமுக‌ம் ஆனவ‌ர் சுஜாதா. ‌சிவா‌ஜி, ர‌ஜி‌னி, கம‌ல் உ‌ள்பட ப‌ல்வேறு நடிக‌ர்க‌ளி‌ன் சுஜாதா நடி‌த்து‌ள்ளா‌ர்.




ர‌ஜி‌னிகா‌ந்‌த் அ‌ம்மாவாக உழை‌ப்பா‌ளி எ‌ன்ற பட‌த்‌தி‌ல் நடி‌த்த சுஜாதா, க‌ட‌ல் ‌மீ‌ன்க‌ள் எ‌ன்ற பட‌த்‌தி‌ல் கம‌ல்ஹாசனுட‌ன் ஜோடியாக நடி‌த்தவ‌ர்.

அ‌ன்ன‌க்‌கி‌‌ளி, அவ‌ர்க‌ள், அ‌ந்தமா‌ன் காத‌லி, ‌வி‌தி போ‌ன்ற ப‌ட‌ங்க‌ள் சுஜாதாவு‌க்கு ‌பிரபலமான ப‌ட‌ங்க‌ள் ஆகு‌ம்.

 (Thanks)News from: webdunia.com

உண்மைவிரும்பி.
மும்பை.

Read more...

ஆலயம் ( தெரிந்துகொள்வோம்)

Tuesday 5 April 2011


                    
 வணக்கம் ! கடவுள் நம்பிக்கை அனைவருக்கும் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை, அது அவர் அவர் நம்பிக்கையை பொருத்தது, இருந்தும் மும்பையில் மாட்டுங்கா பகுதியில் வசித்து வருபவர் சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர், இவர் ஜோதிட கலையில் சிறந்து விளங்குபவர்  இவர் எம்பெருமானின் அவதாரமான ஸ்ரீகலியுக லஷ்மி நரசிம்மர் சன்னதியை நிருவ நினைத்து ,அதை நடைமுறையும் படுத்தியுள்ளார். ஆலயம் அமைந்துள்ள இடமானது மும்பையிலிருந்து சுமார் 75கி.மீ ,அதாவது மும்பையிலிருந்து நியு மும்பை(பன்வெல்), இங்கிருந்து கோவா செல்லும் வழியில் பென்காவ் என்ற ஊருக்கு அருகில் இர்வாடியில் இரண்டு பக்கமும் மலைக்கு நடுவில் ஹைவேக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இங்கு ஸ்ரீ கலியுக லஷ்மி நரசிம்ம உட்சவர், ஸ்ரீ கலியுக ரங்கநாதர், ஸ்ரீ கலியுக ஸ்ரீனிவாச பெருமாள்,ஸ்ரீ கலியுக ஆண்டால் தாயார்,ஸ்ரீ கலியுக ஹனுமன், ஸ்ரீ கலியுக கருடால்வார்,மற்றும் ஸ்ரீ கலியுக பத்மாவதி தாயார் போன்ற விஹ்ரகம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கோசாலையும்  அமைந்துள்ளது இதில் தற்பொழுது  70 பசுக்கள் உள்ளது.இவ்வாலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகளும் மற்றும் குத்துவிளக்கு  பூஜைகளும் நடைபெருகின்றன. இவ்வாலயத்திற்க்கு  தமிழ் மக்கள் மட்டுமின்றி கிறிஸ்துவ மக்களும் மற்றும் இஸ்லாமிய மக்களும்  வந்து இறையருள் பெற்று செல்கின்றனர்.இவ்வாலயத்திற்க்கு வருபவர்கள் அனைவருக்கும் மூன்று வேலை அன்னதானம் வழங்குகிறார்கள், மற்றும் இவ்வாலயத்திற்க்கு வருவதற்க்கு பன்வெல்லில் இருந்து பென்காவ் செல்லும் அரசு பேருந்து அடிக்கடி இருக்கிறது.

            இவ்வாலயத்தை திருப்பதி போன்று கோபுரங்கள்,கலசங்கள் வைத்து சிறப்பாக 40 கோடியில் அமைக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இவ்வாலயம் எக்குறையும் இல்லாமல் சிறப்புடன் முழுமைபெற எல்லாம்வள்ள இறைவனை நாமும் வேண்டிக்கொள்வோம் !

தாங்கள் மும்பையில் வசிப்பவராக இருந்தால்  முடிந்தால் ஒருமுறை இவ்வாலயத்திற்க்கு சென்று வாருங்கள்.
முடிந்தால் இவ்வாலய திருப்பணிக்கு தங்கலால் முடிந்த பொருளோ, பணமோ கொடுத்து உதவலாம். தாங்கள் அளிக்கும் உதவிக்கு வரிவிலக்கு உண்டு. தொடர்புக்கு: திரு ஸ்ரீனிவாச ராமானுஜர் கைபேசி எண்:09324087044.

இத்துடன் ஆலய புகைப்படம் இனைத்துள்ளேன்.








                                                                       
                website:www.kalyuganarasimhatemple.org

இவன்.
உண்மைவிரும்பி.
மும்பை.

Read more...

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Sunday 3 April 2011

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..
குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..
இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.
ஏனென்றால், குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,ஓட்டுக்கு பணம் கிடையாது.டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).கரண்ட் கட் கிடையாது.இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(
ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)
ஆனால்... இன்று..
அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
மீண்டும் உங்கள் நினைவிற்கு..
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,ஓட்டுக்கு பணம் கிடையாது.டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .கரண்ட் கட் கிடையாது.இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

-
மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-
இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது

நம் மாநிலத்தின் நிலை?? 
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பமும்/ ஜெயலலிதாவின் குடும்பமும் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.  
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்
இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.

நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

குறிப்பு:

மேலே உள்ள தகவல் எனது மின்னைஞ்சலுக்கு ஒரு நண்பர் அனுப்பியிருந்தார், இதனை பிறருடனும் பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதினால் இதனை பதிவிடுகிறேன்.


உண்மைவிரும்பி.
மும்பை.

Read more...

தெறியாதவர்கள் இவர்களை தெறிந்து கொள்ளுங்கள்!

Thursday 31 March 2011

 இணையத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள்.தெறியாதவர்கள் இவர்களை தெறிந்து கொள்ளட்டும் என்ற நல்லெண்ணமட்டுமே ஒழிய வேரொன்றும் அறியேன் பராபரமே !
நான் இதனை வெளியிடுவதற்க்கு முன்பாக வேறுயாராவது வெளியிட்டிருந்தால் அதற்க்கு நான் என்ன செய்ய !








உண்மைவிரும்பி.
மும்பை.

Read more...

உஷாரய்யா உஷாரு !

Saturday 26 March 2011

                உஷாரய்யா உஷாரு !
                ஊர் மக்களே உஷாரு !

                தேர்தல் வரப்போகுது
                தெருவெல்லாம் உஷாரு !

                ஓட்டுக்கேட்க்க வருவாங்க - நீ
                கேட்பதெல்லாம் தருவாங்க !

                கொடியை ஏற்றி வைப்பாங்க
                இனிப்பும் கொஞ்சம் கொடுப்பாங்க,

                குழந்தைக்கும் பெயர் வைப்பாங்க,
                சிறிய நிதியும் கொஞ்சம் கொடுப்பாங்க !

                காரசாரமாய் பேசி - கைய தட்டவைப்பாங்க !

                வேடிக்கையாக இல்லாமல்
                விபரமாக யோசியுங்க !
       
                உண்மையாக உழைத்தவருக்கு
                உங்கள் வாக்கை அளியுங்கள் !

                             
                                உண்மைவிரும்பி.
                                        மும்பை.

குறிப்பு : இக்கவிதை மும்பையிலிருந்து வெளிவந்த          "தமிழ் டைம்ஸ்" தினசரியில் 06/10/2004 அன்று பிரசுரமானது.


Read more...
online Tamil book store

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP