தெறியாதவர்கள் இவர்களை தெறிந்து கொள்ளுங்கள்!

Thursday, 31 March 2011

 இணையத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள்.தெறியாதவர்கள் இவர்களை தெறிந்து கொள்ளட்டும் என்ற நல்லெண்ணமட்டுமே ஒழிய வேரொன்றும் அறியேன் பராபரமே !
நான் இதனை வெளியிடுவதற்க்கு முன்பாக வேறுயாராவது வெளியிட்டிருந்தால் அதற்க்கு நான் என்ன செய்ய !








உண்மைவிரும்பி.
மும்பை.

Read more...

உஷாரய்யா உஷாரு !

Saturday, 26 March 2011

                உஷாரய்யா உஷாரு !
                ஊர் மக்களே உஷாரு !

                தேர்தல் வரப்போகுது
                தெருவெல்லாம் உஷாரு !

                ஓட்டுக்கேட்க்க வருவாங்க - நீ
                கேட்பதெல்லாம் தருவாங்க !

                கொடியை ஏற்றி வைப்பாங்க
                இனிப்பும் கொஞ்சம் கொடுப்பாங்க,

                குழந்தைக்கும் பெயர் வைப்பாங்க,
                சிறிய நிதியும் கொஞ்சம் கொடுப்பாங்க !

                காரசாரமாய் பேசி - கைய தட்டவைப்பாங்க !

                வேடிக்கையாக இல்லாமல்
                விபரமாக யோசியுங்க !
       
                உண்மையாக உழைத்தவருக்கு
                உங்கள் வாக்கை அளியுங்கள் !

                             
                                உண்மைவிரும்பி.
                                        மும்பை.

குறிப்பு : இக்கவிதை மும்பையிலிருந்து வெளிவந்த          "தமிழ் டைம்ஸ்" தினசரியில் 06/10/2004 அன்று பிரசுரமானது.


Read more...

எனது கவிதைகள் (அறிமுகம்)

Wednesday, 16 March 2011

அனைத்து பதிவருக்கும் வணக்கம்!

 
எனது பள்ளி நாட்களிலேயே எனக்கு கொஞ்சம் கவிதையின்பால் ஈர்ப்பு, அதனால் அந்தநாட்களில் கடைசி இருக்கையில் அமர்ந்தவாறு ஏதாவது கவிதைகள் கிறுக்கிக்கொண்டு இருப்பேன்,அப்படி எழுதும் கவிதைகள் அனைத்தும் உண்மை சம்பவங்களை சார்ந்தே அமைந்ததால், நண்பர்கள் வட்டத்தில் உண்மைவிரும்பி என்று அன்புடன் அழைக்கப்பட்டேன்,இருந்தும் அப்பெயரை பெரிதும் பயன்படுத்தியதில்லை,நான் தமிழகத்திலிருந்து மும்பைக்கு வேலையின்காரணமாக சென்று குடும்பத்துடன் வசிக்க நேர்ந்ததால், அங்கு நேரம் கிடைக்கும்பொழுது சிறு சிறு கவிதைகளை "தமிழ்டைம்ஸ்" என்ற தினசரியில் உண்மைவிரும்பி என்ற பெயரில் எழுதி வந்தேன், ஆயினும் மும்பை மாநகருக்கு தினகரன் நாளிதழ் வந்தபிறகு தமிழ்டைம்ஸை நிறுத்திவிட்டார்கள், நானும் கவிதைகள் எழுதுவதையும் கொஞ்சம் குறைத்துக்கொண்டேன் இதற்க்கு நேரமின்மையும் ஒரு காரணம். இருந்தும் தமிழ் மணத்தில் அனைத்து பகுதிகளையும் தினந்தோறும் இருமுறை வாசித்து விடுவேன். இதுவரை அதிகம் விரும்பிபடிப்பது வேலன் போட்டோஷாப்,மற்றும் சசி அவர்களின் மென்பொருள் பற்றியது,மற்றும் கேபிள் சங்கரின் பகுதியும் அடங்கும்,மற்றும் ஈரோடு சரவணன்  அவர்களின் பங்கு சந்தை நிலவரம் ஆகியவையாகும். ஒரு முறை நண்பர் சசி அவர்களின் பதிவிற்க்கு பின்னூட்டம் இடும்பொழுது சசி அவர்கள் என்னையும் எழுத அழைத்திருந்தார்,அதற்க்கு முன்பாக நண்பர் மோகன்பிரபு(பங்கு சந்தை நிலவரம் )அவர்களும் என்னை எழுத ஊக்குவித்தார் , அதன் பிறகு ஒரு நாள் ஈரோடு சரவணன்  அவர்கள் யாகு மெசேஞ்சரில் தொடர்பில் வ்ந்த போது என்னை எழுத ஊக்குவித்ததுடன் இல்லாமல் தமிழ் தட்டச்சு மென்பொருளையும் லிங்கொடுத்து உதவினார், அதன்பிறகுதான் இந்த கன்னி முயற்ச்சி, அடுத்த பதிவிலிருந்து எனது கவிதைகளை பிரசுரிக்கவுள்ளேன், இதில் பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும் அதை திருத்திக்கொள்கிறேன். மற்றும் நான் பங்கு வணிகத்தில் பணி புரிவதால் எனக்கு தெரிந்ததை தங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன் ! நன்றி
அன்புடன்.
உண்மைவிரும்பி
மும்பை.

Read more...
online Tamil book store

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP