தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Sunday, 3 April 2011

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..
குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..
இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.
ஏனென்றால், குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,ஓட்டுக்கு பணம் கிடையாது.டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).கரண்ட் கட் கிடையாது.இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(
ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)
ஆனால்... இன்று..
அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
மீண்டும் உங்கள் நினைவிற்கு..
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,ஓட்டுக்கு பணம் கிடையாது.டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .கரண்ட் கட் கிடையாது.இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

-
மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-
இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது

நம் மாநிலத்தின் நிலை?? 
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பமும்/ ஜெயலலிதாவின் குடும்பமும் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.  
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்
இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.

நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

குறிப்பு:

மேலே உள்ள தகவல் எனது மின்னைஞ்சலுக்கு ஒரு நண்பர் அனுப்பியிருந்தார், இதனை பிறருடனும் பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதினால் இதனை பதிவிடுகிறேன்.


உண்மைவிரும்பி.
மும்பை.

14 comments:

Unknown 4 April 2011 at 05:23  

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று படிய களத்தை விட
என்று மடியும் இந்த தமிழகத்துக்கு பிடித்த -----------------
என்று சொல்லும் நிலையில் உள்ளோம்.
வாழ நரேந்திர மோடி அவர்கள்.

Unknown 4 April 2011 at 05:24  

என் வலைதளத்தில் கருத்துரையிட்ட உங்களுக்கு நன்றிகள்.
தொடர்ந்து ஆதரவை நாடும் தோழன் மகேஷ்.
நன்றி நண்பரே.

Unknown 4 April 2011 at 05:27  

pls take out word verification option
then only readers can post comments easily...
settings->comments->Show word verification for comments? there pls give "NO"

thanks

MANO நாஞ்சில் மனோ 4 April 2011 at 05:31  

நல்ல விழிப்புணர்வு பதிவு.....

நானும் மும்பைதான்....

vettha.(kovaikavi) 4 April 2011 at 08:53  

kujarath thakaval nallathu nanry,
vetha. Elangathilakam.
Denmark.

எனது கவிதைகள்... 4 April 2011 at 20:18  

1.நன்றி! மகேஷ்வரன் சார், out word verification option பற்றி எனது மின்னஞ்சல்முகவரியில் விபரமாக தெறிவிக்கவும்.மற்றும் நமக்கு வருகிற comments க்கு எப்படி பதில் தருவது என்பதையும் முடிந்தால் தெறிவிக்கவும்.

2.நன்றி! நாஞ்சில் மனோ சார்,தாங்களும் மும்பைவாசி என்பதில் மிகவும் மகிழ்ச்சி !

3.தங்களின் வருகைக்கு நன்றி வேதா சார்.

சக்தி கல்வி மையம் 4 April 2011 at 22:25  

நன்றி..
இனி தொடர்ந்து வருவேன்..
ஓட்டும் போடுவேன்..

எனது கவிதைகள்... 4 April 2011 at 23:31  

நன்றி கருன் சார், புதியதாக வருபவர்களுக்கு இது உற்ச்சாகத்தை கொடுக்கும் சார் !

உண்மைவிரும்பி.
மும்பை.

Unknown 4 April 2011 at 23:53  

நம் நாட்டை நினைத்து வேதனையா இருக்குங்க..

Prakash 5 April 2011 at 00:11  

Many are saying Gujarat is growing fast, this is just hype created by Pro RSS Medias.

What is Gujarat’s achievement in Social sectors and what is the status of OBC/SC/St and Minority population.

Because of following reasons, Gujarat is having higher revenue when compared with other states.

1. Highest industrialized state even before Independence days.
2. Nearly 50% of population is economically and Socially Forward Community, not like rest of other states, where at least 85% shall be backward/SC communities.
3. Focuses mainly on Commercial Crops (Cotton, Sugarcane etc).
4. Most of the Population are from Business Communities/Society (Bhaniya etc) , hence they turn into entrepreneurs by default.
5. Gujarathi’s migrated to UK, US and Canada well before independence are supporting with their investments.

To get votes in Gujarat, don't give free-bees, just do ethnic cleansing, you'll get more votes.

If Cong has mentioned in their manifesto that they'll be tough with Muslims than BJP, then Gujarathi's might have voted for Cong.

A student who was getting 80% and now gets 95% is not a big achievement; a student who was getting 40% and now gets 85% is the real growth.

எனது கவிதைகள்... 5 April 2011 at 00:21  

Thank you Prakash sir !

unmaivrumbi.
Mumbai.

மானிடன் 5 April 2011 at 00:25  

சரியான நேரத்தில் சரியான பதிவு . நன்றி நண்பரே !

எனது கவிதைகள்... 5 April 2011 at 00:34  

நன்றி செல்வராஜ் சார் !

உண்மைவிரும்பி.
மும்பை.

aranthairaja 5 April 2011 at 01:08  
This comment has been removed by the author.

Post a Comment

online Tamil book store

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP