என்சோக கதையை கேளுங்க ! (1)
Monday, 16 May 2011
நாங்கள் கடந்த 20 வருடத்திற்க்கு மேலாக மும்பையில் வசித்து வருகிறோம், எனது குடும்பம் சிறிய குடும்பம் அப்பா, அம்மா, மனைவி மற்றும் 1-மகள், 1-மகன்.
அப்பா 2007ல் மும்பையில் இறந்துவிட, அம்மாவுடனே வசித்துவந்தோம். இந்த ஆண்டு எனதுமகள் +2 தேர்வு எழுதியுள்ளார், மகன் +1 ல் தேர்ச்சியாகி +2 சென்றுள்ளார். இந்த ஆண்டு மேற்படிப்பிற்க்காக எனது மகள் சில நுழைவு தேர்வு எழுத வேண்டியிருந்ததால் தமிழ்நாடு(சொந்த ஊருக்கு) செல்ல நினைக்கவில்லை. இருந்தும் திடிரென முடிவெடுத்து நானும் எனது மகனும் மட்டும்
ஒருவார பயணமாக சொந்த ஊருக்கு சென்றுவருவது என முடிவுசெய்து பயண ஏற்பாடு செய்யும் வேலையில்,எனது நண்பர் ஊரிலிருந்து தொலைபேசியின் மூலம் நமது ஊரில் இந்த வருடம் "நாங்கூர் அய்யனாருக்கு" பொங்கள் வைத்து அன்னதானம் போடுகிறோம் தாங்கள் குடும்பத்துடன் வந்து கோவில் விஷேஷத்தில் கலந்துகொள்ளுமாறு கூற எனது அம்மாவும் ஆமாம்தம்பி இதுபோல கிராமத்துகோவில் விஷேஷத்தை நமது குழந்தைகள் பார்த்தது இல்லை நாம் அனைவரும் 1 வார பயணமாக ஊர் சென்றுவரலாம் என கூற முதலில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று விட்டு பிறகு எங்கள் சொந்த ஊருக்கு செல்வதென பயணத்திற்க்கான ஏற்பாட்டைச்செய்தேன்.
ஏப்ரல்16-ல் மும்பையிலிருந்து மாலை 3.45 க்கு கன்னியாகுமாரி செல்லும் இரயிலில் பயணித்து மறுநாள் மாலை 5.30க்கு காட்பாடி ரயில்நிலையம் வந்தடைந்தோம் ,முனேற்பாடின்படி
ஏற்பாடு செய்திருந்த TATA INDIGO கார் வந்து எங்ளை அழைத்துசெல்ல காத்திருந்தது, நாங்களும் அந்த காரில் திருவண்ணாமலையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தோம்
அன்று பவுர்ணமி என்பதால் ரோட்டில் வாகன நெரிசல் அதிகமாகவே கானப்பட்டது அதுவும் அன்று
சித்ராபவுர்ணமி இருந்தும் கார் ஓட்டுனர் காரை நிதானமாக ஓட்டிச்சென்றார்.
வேலூரை தாண்டி போலுருக்குமுன்பாகவே யாரும் எதிர்பாராவிதமாக.......
உண்மைவிரும்பி.
மும்பை
14 comments:
என்னய்யா இப்பிடி தொடரும்ன்னு போட்டு திடுக்கிட வச்சிட்டீங்க...!!!
அனைத்தையும் ஒரே நேரத்தில் எழுத நேரமிண்மையும்,ஒரு மாத விடுப்புக்குபிறகு அலுவலக பணிச்சுமையும்தான் காரணம் மனோசார் !
உண்மைவிரும்பி.
மும்பை.
சுவாரசியமா படிச்சுண்டே வரும்போது தொடரும் போட்டுட்டிங்களே? பாம்பேயில் எங்கே இருக்கீங்க நானும் இன்னும் நிறைய பேரும் பாம்பேல இருக்கோமே. நான் 20 வருஷமா இருக்கேன்.போனமாதம் ஒரு மினி பதிவர் சந்திப்பு தானாவில் நடஹ்தினேன். நானும் அமைதிச்சாரல் என்னும் பதிவரும் சந்தித்தோம். அதுபத்தி என் ப்ளாக்கில் எழுதி இருக்கேன் நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்.
சம்பவத்தைப் படித்து முடிப்பதற்குள் தொடரும் என்று போட்டுவிட்டீர்கள் .சம்பவம் தொடரும்விதமும் இதன் தலையங்கம் அமைந்துள்ளவிதமும்
உங்கள் வாழ்வில் ஏதோ ஓர் மறக்கமுடியாத துன்பத்தை நிகழ்த்திவிட்டதாய் உணர முடிகின்றது .எனவே உங்கள் மன வேதனையோ சஞ்சலமோ தீர
வேண்டும் என உளதார பிரார்த்தித்தேன் .முடிந்தால் மீதி விஷயத்தை விரைவாய் எழுதுங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........
ரொம்ப சுவராஷ்யமா போய்ட்டிருக்கும்போது தொடரும் போட்டுட்டீங்களே..!! மறுபடியும் எப்போ தொடரப்போறீங்க..!?
நேரமிருக்கும்போது எமது வலைப்பூவையும் பார்வையிட அழைக்கிறேன். புதிய பதிவு இன்றே செய்யுங்கள்..!!
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...
அடுத்த பதிவை எதிர்போர்கிறோம்
ஏதோ சோகம் உங்களைத் தாக்கியுள்ளதாகத்
தெரிகிறது. ஆறுதல் கொள்ளுங்கள்!
தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல்
வாழ்த்துக்கள்!
சா இராமாநுசம்
நன்றி இராமாநுசம் அய்யா!
உண்மைவிரும்பி.
மும்பை.
செம சோகம் போல........
நல்லா சுவாரஸ்யமா எழுதுறீங்க...தொடருங்கள்..
எங்க பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டிங்களா
லக்ஷ்மி அம்மா எப்படி இருக்கீங்க!
Post a Comment